ஜெகத் கஸ்பார். சென்னை 600014: நக்கீரன் பப்ளிக்கேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, 1வது பதிப்பு, 2010. (சென்னை 600014: சாருபிரபா பிரின்டர்ஸ்).
168 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-93-81020-09-8.
வெரித்தாஸ் வானொலியின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் தமிழகத்தில், நக்கீரன் பத்திரிகையில் எழுதிய ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான கட்டுரைத் தொடரொன்று மறக்க முடியுமா என்ற தலைப்பில் நீண்டகாலம் வெளிவந்தது. இத் தொடரின் முதல் 56 அத்தியாயங்கள் இரு நூல்களாக வீரம் விளையும் ஈழம், பேசுகிறார் பிரபாகரன் ஆகிய தலைப்புகளில் முன்னர் வெளியிடப்பட்ட நிலையில், இதன் தொடர்ச்சியாக மேலும் இரு நூல்கள் ஒரே தடவையில் வெளியிடப்பட்டன. ஒரு போராளியின் கடிதம் என்ற தலைப்பிலும் தமிழர்களே தமிழர்களே என்ற தலைப்பிலும் வெளியாகிய இத்தொடர்க்கட்டுரை வரிசையில் அமைந்த நான்காவது நூல் இதுவாகும். இத்தொகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரபாகரனுடனான தனது ஆழமான சந்திப்புகள் குறித்தும் அப்போது நடந்த அழுத்தமான உரையாடல்கள் குறித்தும் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறார்.