9005 பஞ்சவர்ணக் கதம்பம்.

இ.சிறிஸ்கந்தராசா. கொழும்பு 6: இராமசாமி சிறீஸ்கந்தராசா, 93, பீட்டர்சன் ஒழுங்கை, ஈ 15, பிட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (வெள்ளவத்தை: ரெக்னொ பிரின்ட், 581, 2/1 காலி வீதி).

120 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ.

வாசகரின் அறிவு, நினைவாற்றல், சாதுரியம் ஆகியன விருத்தியடைவதற்காக தேர்ந்த ஐந்து துறைகளிலிருந்து பொறுக்கித் தொகுத்த பஞ்சவர்ணக் கதம்பம் இதுவாகும். விடுகதைகள், கடி ஜோக்ஸ்கள், பொது அறிவுக் கேள்வி பதில்கள், பொது அறிவுப் பயிற்சிகள், கணக்குப் புதிர்கள் என இவை வேறுபடுகின்றன. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் வழித்தோன்றலான நூலாசிரியர் ஒரு பன்னூலாசிரியருமாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 150916).     

ஏனைய பதிவுகள்

15394 கூத்த யாத்திரை (நான் கொண்டதும் கொடுத்ததும்).

சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 214 பக்கம், புகைப்படங்கள்,