காஞ்சனா இரத்தினம். வவுனியா: காஞ்சனா இரத்தினம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (வவுனியா: ஜெய்னிக்கா பிரின்டர்ஸ்).
v, 258 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 25×18 சமீ.
அனைத்துத் துறைசார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிய 600 இற்கும் மேற்பட்ட வினா விடைகளுடனும், விடய விழிப்புக்கள் பலவற்றை உள்ளடக்கியும் இந்நூல் வெளிவந்துள்ளது. மருத்துவமும் கண்டுபிடிப்புகளும், நாடுகளும் அவற்றின் சிறப்புகளும், உலகின் முக்கிய வரலாற்றுப் பதிவுகள், விண்வெளியியலும் நவீன கண்டுபிடிப்புகளும், உயிரினங்களும் சிறப்பியல்புகளும், துறைசார் விடயங்களில் தடம்பதித்தவர்கள், உலகப் பொது அமைப்புகள், தகவல் தொழில்நுட்பங்கள், உலக விளையாட்டுக்கள், நோபல் பரிசு, உலகின் முதலாவது நிகழ்வுகள், தாய்நாடு பற்றியவை, பெண்கள் உலகம், கலை கலாச்சாரம், தமிழ் இலக்கிய எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளும் சிந்தனாவாதிகளும், புவியியல், தாவரவியல், உலக நாடுகளும் அதிபர்களும், உலகக் கோப்பைக் கால்பந்தாட்டம், இயற்பெயரும் புனைபெயரும், உலக விமானப் போக்குவரத்துகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், முக்கிய தினங்கள், ஆண்டுகள், என இன்னோரன்ன 46 தலைப்புகளில் இந்நூல் தகவல்களைப் பொதிந்துவைத்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 158852).