9031 துளிர்: உளவியல் கட்டுரைகள்.

ச.யேசுதாசன். மன்னார்: கலையருவி, மன்னார் மறைமாவட்ட  சமூகத் தொடர்பு அருட்பணி மையம், 1வது பதிப்பு, மே 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.அச்சகம், 27/2, புங்கன்குளம் வீதி, பாண்டியன் தாழ்வு).

137 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54804-1-3.

அன்றாட வாழ்வில் உளவளத்துணை, சுமை பகிர்ந்து சுகம் பெறுவோம், துன்பத்தை எதிர்கொள்வோம், இழப்புக்கள், வழிதேடும் விழிகள், அழுகை அனைத்திற்கும் தீர்வாகுமா?, பாதிக்கப்பட்டோருடன் பணியாளர்கள், தாய்மையின் சிறப்பு, இன்றைய இளையோர், குடிவெறி, சுனாமி ஒரு தீமை, பயம் பயனுள்ளது, வாழ்க்கை ஓர் போர்க்களம், இறப்பு ஆகிய 14 உளவியல்சார் உளவளத்துணைக் கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர், 2006-2008 காலப்பகுதியில் சொலிடார் நிறுவனத்தின் இணைப்பாளராக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234593).

ஏனைய பதிவுகள்

16856 எமது குடும்ப சரிதம் : எண்பது வயது சதாபிஷேகமலர்.

இ.குமாரசாமி சர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ இ.குமாரசாமி சர்மா, ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர், 15, B.A. தம்பி லேன், வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).