பெனி யே.ச. அட்டன்: அட்டன் சமூக நலநிறுவன வெளியீடு, இல.30, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (அட்டன்: செனித் அச்சகம்).
92 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
அட்டன் சமூக நலநிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றும் ஆசிரியரின் சமயப்பணியும் சமூகப்பணியும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திவந்துள்ளன. இந்நூலில் 14 தலைப்புகளில் அறிவுரைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். புத்தாண்டுப் பரிசாக இந்நூலை வழங்கியுள்ள இவர், இனவாதம், குழுவாதம், பிரதேசவாதம், மதவாதம் முதலியவற்றால் மனித இதயங்களைப் பிழிந்தாலும் நாம் உண்மையானவராய் நாம் சார்ந்த சமூக மக்கள்மீது அக்கறைகொண்டவராய் இருப்போம் என்று கனிவாகக் குரல் எழுப்புகிறார். இயற்கையை இங்கிதமாக ரசிக்கும் இவர் இயற்கையில் இறைவன் படைப்பின் அதிசயங்களைக்கண்டு வியக்கிறார். சமூகத்தைச் சீரழிக்கும் சினிமா, செல்லிடத் தொலைபேசி, முகநூல் (Face Book) போன்றவற்றால் இளையோர் சமூகம் சின்னாபின்னமாவதைக்கண்டு குமுறுகின்றார். தற்காலிக இன்பத்திற்காக இளையோர் கல்வியை புறக்கணிப்பதைக்கண்டு தவிக்கிறார். இளையோர் வாழ்வுசிறக்க வழிகாட்டும் மானிட மேம்பாட்டு நூல் இது. சூரியகாந்தி சஞ்சிகையில் ‘சங்கமச் சிதறல்கள்’ என்ற தலைப்பில் தொடராக வெளிவந்தவை. புத்தாண்டு டயறியின் முதல் பக்கம், அது ஒரு ஜனவரியின் சனிக்கிழமை, புதுவருஷ விடியலில் மனம் திறக்கும் இதயங்கள், உழைப்பாளி நெஞ்சின் ஓசைகள், யார் இந்த நான்?, மீண்டும் அந்த ஞாபகங்கள், சுவருக்கும் கதையுண்டு, எங்கள் தலைமுறையே எங்கே நீ செல்கிறாய்? இதோ எந்தன் பள்ளிக்கூடம், சிதையாத சித்திரங்கள், பஸ் வண்டிப் பயணங்கள், அந்த 24 மணித்தியாலம், வாசகர் வரையும் மடல், இணைந்து நடப்போம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன.