க.கணேசராஜா. தஞ்சாவூர் 4: மகாவீர் பதிப்பகம், 70, மருத்துவக் கல்லூரி சாலை, 2வது பதிப்பு, ஜுலை 2011. 1வது பதிப்பு விபரம் இல்லை.(தஞ்சாவூர் 1: மாணிக்கம் பிரிண்டர்ஸ்).
120 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-53673-1-8.
மெய்யியல், அளவையியல் சிந்தனைகளை அறிந்துகொள்ள பல்தேர்வு வினாக்களின் வடிவில் இந்நூல் பயிற்சியளிக்கின்றது. ஐரோப்பிய மெய்யியல், இந்திய மெய்யியல், ஐரோப்பிய அளவையியல், இந்திய அளவையியல், குறியீட்டு அளவையியல், முஸ்லிம் மெய்யியல், ஒழுக்க மெய்யியல், கலா மெய்யியல், உள மெய்யியல் ஆகிய துறைகளுக்குரிய வினாக்கள் என்பன தனித்தனி அலகுகளாகவும் ஏனைய மெய்யியல் சார்பான வினாக்கள் தனியொரு அலகாகவும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. கலைச்சொற்களும், மேலைத்தேய மெய்யியலாளர்கள் எழுதிய நூல்களும் நூலின் இறுதியில் பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 222047).