க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1993. (யாழ்ப்பாணம்: டினேஷ் பதிப்பகம், 64, புதுச் செம்மணி வீதி, கல்வியங்காடு).
34 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 20×14.5 சமீ.
நுண்மதி என்பது ஒருவரது இயல்பான ஆற்றலாகும். தன்னையும் தான் வாழ்கின்ற சூழலையும்பற்றிய பூரணமான விழிப்புணர்ச்சியே அதுவாகும். ஒருவரின் நுண்மதியைக் கணக்கிட நுண்மதி ஈவுப் பரீட்சைகளில் பல்வேறு அறிவுத்திறன்கள் பரீட்சிக்கப்படும். எண் அறிவு, மொழி அறிவு, சொல்லறிவு, தர்க்க அறிவு, கணித அறிவு, கட்புலனறிவு, எனப் பலவாறான புலமைகள் பரீட்சிக்கப்படும். அவ்வகையில் ஆய்ந்தறிதல் திறனும் (Reasoning Ability) ஒன்றாகும். இவை ஒருவனின் அறிவு, விவேகம், ஆளுமை, பொறுப்பேற்கும் திறன் என்பனவற்றை இனம்காட்டுகின்றன. இந்நூல் ஆய்ந்தறிதல் திறன் பற்றிய விரிவான தகவல்களைத் தருகின்றது. இதன்மூலம் ஒருவர் தனக்குள் குறிப்பிட்ட திறனை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை இனம்காணமுடிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 92794).
11A06 ஆய்ந்தறிதல் திறன்.
க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (யாழ்ப்பாணம்: டினேஷ் பதிப்பகம், 64, புதுச் செம்மணி வீதி, கல்வியங்காடு).
34 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 20×14.5 சமீ.
நுண்மதி என்பது ஒருவரது இயல்பான ஆற்றலாகும். தன்னையும் தான் வாழ்கின்ற சூழலையும்பற்றிய பூரணமான விழிப்புணர்ச்சியே அதுவாகும். ஒருவரின் நுண்மதியைக் கணக்கிட நுண்மதி ஈவுப் பரீட்சைகளில் பல்வேறு அறிவுத்திறன்கள் பரீட்சிக்கப்படும். எண் அறிவு, மொழி அறிவு, சொல்லறிவு, தர்க்க அறிவு, கணித அறிவு, கட்புலனறிவு, எனப் பலவாறான புலமைகள் பரீட்சிக்கப்படும். அவ்வகையில் ஆய்ந்தறிதல் திறனும் (Reasoning Ability) ஒன்றாகும். இவை ஒருவனின் அறிவு, விவேகம், ஆளுமை, பொறுப்பேற்கும் திறன் என்பனவற்றை இனம்காட்டுகின்றன. இந்நூல் ஆய்ந்தறிதல் திறன் பற்றிய விரிவான தகவல்களைத் தருகின்றது. இதன்மூலம் ஒருவர் தனக்குள் குறிப்பிட்ட திறனை வளர்த்துக்கொள்ளும் வழிமுறைகளை இனம்காணமுடிகின்றது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9054)