9063 அறநெறிப் பாமஞ்சரி.

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்).யாழ்ப்பாணம்: திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் அவர்கள் ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, மே 1969. (யாழ்ப்பாணம்:  ஸ்ரீ சண்முகநாதன் அச்சகம்).

ix, 184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

தமிழறிஞர் சொக்கன் கருத்துரை, விளக்கவுரைகளுடன் தொகுத்தளித்துள்ள அறநெறிப்பா மஞ்சரி. சேர்.பொன் இராமநாதன் அவர்களின் ஆத்திசூடி மந்திர விளக்கம் என்ற சிறு நூலும் சேர்ந்தது.  சிறுவர்கள் கருத்தறிந்து மனனஞ்செய்வதற்கேற்ற வகையில் இப்பாமஞ்சரி உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியின் சிறப்பு, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர், மானவீரம், நல்லாரைப் பொறுத்ததே நானிலம், யாதும் ஊரே யாவருங் கேளிர், உழவும் வாணிகமும், மாட்சிபெறு மன்னன், முனிபுங்கவர்களின் தவநிலை மாண்பு, நன்மக்களைப் பெற்றோரை நாடுஞ்சிறப்பு, நயனில் மாக்கள், பெற்றோர்க்குப் பெண்களில் ஏதுரிமை, மண்ணாசை அழிவிற்கே வித்து, இளங்கோவடிகளின் இன்னுரை, சாத்தன் வகுத்துரைத்த நல்லறம், வள்ளுவன் வாய்மொழி, சமண முணிவர்களின் சால்புரை, இனியவை எவை, கணிமேதையாரின் அணியுரை, கொன்றை வேந்தன், வாக்குண்டாம்,  நல்வழி, வெற்றிவேற்கை, நன்னெறி போன்ற 35 இன்னோரன்ன தலைப்புகளின்கீழ் இவை தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135032).

ஏனைய பதிவுகள்

Deren Craps

Content Craps Varianten Kriterien Für Diesseitigen Besten Craps Tafel In Angeschlossen Casinos Traktandum Verbunden Craps Casinos Within Alpenrepublik 2024 Unsere Traktandum Erreichbar Casinos Within Alpenrepublik