கே.எம்.செல்வரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1965. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32 கண்டி வீதி).
x, 126 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 21.5×14 சமீ.
சித்தன்கேணியைச் சேர்ந்த கே.எம். செல்வரத்தினம் அவர்களின் மொழிபெயர்ப்பும், இலக்கணக் குறிப்புகளும் கொண்ட நூல். முகவுரை, குறிப்புச் சொற்கள், கதைவிளக்கம் ஆகிய பகுதிகளை அடுத்து நூலின் பிரதான பகுதியான நளோபாக்கியாயனம் சர்க்கம் 4, சர்க்கம் 5 ஆகியவற்றுடன் இதோபதேசத்தின் தொடக்கத்தில் அமைந்த முதல் ஆறு கதைகளையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 87162).