சி.கணேஷ். குப்பிளான்: கற்பகம் கலைக்கூடம், 1வது பதிப்பு, மார்ச் 2008. (வவுனியா: சூரியா அச்சகம், கந்தசாமி கோவில் வீதி).
iv, 184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
இருபது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலில், அறிமுகம், புராதன காலம், அனுராதபுரக் காலம், பொலநறுவைக்காலம், ஆரியச் சக்கரவர்த்திகள் காலம், போர்த்துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், பிரித்தானியர் காலம், இருபதாம் நூற்றாண்டு, இலங்கையில் இந்து ஆலயங்கள், சமயப் பெரியார்கள், இலங்கையில் இந்து சமய நிறுவனங்கள், ஈழத்துச் சித்தர் வரலாறு, ஈழத்து நாட்டார் சமய வழக்காறுகள், ஈழத்தில் கண்ணகி வழிபாடு, ஈழத்து இந்து மன்னர்கள், இராசதானிகளில் சைவப் பரம்பல், சைவ பௌத்த உறவு, இலங்கையில் இந்து சமயமும் பிற சமயங்களும் ஆகிய தலைப்புகளில் ஈழத்து இந்துமத வரலாறு விபரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 200037).