9081 இந்து நாகரிகம்-சில பார்வைகள்: க.பொ.த. உயர்தரம்.

சின்னத்துரை சோதிலிங்கம். யாழ்ப்பாணம்: தேன்மொழி சோதிலிங்கம், செல்வகம், இணுவில் கிழக்கு, காரைக்கால் வீதி, இணுவில், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி கணனி அச்சகம், 1227,கே.கே.எஸ் வீதி, பூநாறி மரத்தடி).

(3), 157 பக்கம், விலை: ரூபா 160.,அளவு: 20×14.5 சமீ.

மல்லாகம் மகா வித்தியாலயம், இணுவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சி.சோதிலிங்கம் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் தேவைகருதி எழுதிய நூல் இது. இந்து நாகரிகம் பற்றிய பல்லவர்கால சமய வரலாறு, காஷ்மீர சைவம், தோத்திரமும் சாஸ்திரமும் ஆகிய பிரதான நான்கு கேள்விகளுக்கு விரிவான விடையளிக்கும் நான்கு கட்டுரைகளுடன், சித்தாந்த சாஸ்திர நூல்களிலே திருவருட்பயன், இந்துக்களின் ஒழுக்கவியல் பண்புகள், காரைக்கால் அம்மையார், மனுதர்ம சாஸ்திரம், தஞ்சைப் பெருங்கோயில், ஸ்ரீ தக்ஷண கைலாசபுராணம், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயம், வானவன் மாதேவி ஈஸ்வரம், இலிங்கோற்பவ மூர்த்தமும் வழிபாடும், தட்சிணாமூர்த்தமும் அதன் வழிபாடும், திருமந்திரமும் அதன் வழிபாடும், திருமந்திரமும் அது காட்டும் வாழ்வு முறையும், நாயக்கர்கால கோபுரங்கள், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், நம்மாழ்வார் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 15 கட்டுரைகளையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்