மு.கந்தையா. சென்னை 5: குமரன் பதிப்பகம், 13/2, கஜபதி தெரு, 1வது பதிப்பு, அக்டோபர் 1991. (சென்னை 600015: துர்காதேவி பிரிண்டர்ஸ், 13, குமரன் காலனி).
255 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 18×12.5 சமீ.
சைவசித்தாந்தத்தை முழுநிலையில் விளங்கிக் கொள்ளப் பயன்படும் நூல் அருணந்தி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட சிவஞான சித்தியார் என்ற நூலாகும். அந்நூலின் சாரத்தைப் பிழிந்து இலகு தமிழில் சிவஞானசித்தியாருக்கு விளக்கவுரையாக சைவசித்தாந்த தத்துவஞானியான ஏழாலையூர் பண்டிதர் மு.கந்தையா இந்நூலை எழுதியுள்ளார். இன்றைய அறிவியல் அணுகுமுறைக்குப் பொருத்தமான வகையில் தர்க்கரீதியான விளக்கங்களுடனும் இலகுவாக விளங்கிக்கொள்ளத்தக்க எடுத்துக்காட்டுகளுடனும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூற்பொருள் முழுமையும் 36 பகுதிகளாகப் பகுக்கப்பட்டு நூலில் கிடந்த முறையே ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. பின்னாளில் பண்டிதர் மு.கந்தையா நூல்வெளியீட்டுக் கழகம் இந்நூலை 2006இல் மீள்பதிப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இப்பெரியாரின் சித்தாந்தச் செழும் புதையல், அரியவும் பெரியவும் ஆகிய நூல்கள் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்பெற்றவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 93157).