9103 திருமூலர் திருமந்திரம்.

மௌனாச்சிரம். கொழும்பு 6: மௌனாச்சிரம், 19, ஐ.பீ.சீ. வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (கொழும்பு 13: லட்சுமி பிரின்டர்ஸ்).

xliv, 466 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13 சமீ.

வெள்ளவத்தை மௌனாச்சிரம வெளியீட்டுத் தொடரில் நான்காவதாக வெளிவந்துள்ள ஆன்மீக அறிவியல் நூல். திருமூலர் மக்கள் வாழ்வு மலர, வறுமை நீங்க, கடைப்பிடிக்கவேண்டியநெறிமுறைகளைத் தனது திருமந்திரத்தில் கூறியுள்ளார். வாழ்க்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, என்பன பற்றி எல்லாம் கூறி உய்ய செய்யவேண்டிய கருமத்தையும் கூறியுள்ளார். சிறந்த குருவினை அடைந்து ஆசிபெற்று அவர்வழிநின்று வாழ்வை மேம்படுத்தவேண்டும் என்கிறார். கல்லாத மூடரைக் காணாதே கல்லாத மூடர்சொல் கேளாதே என்றும் போதிக்கிறார். திருமூலரின் அரிய பெரிய கருத்துக்களை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14905 நகுலேஸ்வர குரு: கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தா பிரதமகுரு பிரமஸ்ரீ கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்களின் பவளவிழா மலர்.

மலர்க் குழு. கீரிமலை: பவளவிழாச் சபை, நகுலேஸ்வர தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (16), 160 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18 சமீ. 03.12.2000