வாகரைவாணன் (இயற்பெயர்: ம.அரியரத்தினம்). மானிப்பாய்: வாகரைவாணன், பழனம், உடுவில் தெற்கு, உடுவில், 1வது பதிப்பு, ஆனி1993. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், 89, மவுண்ட் கார்மல் வீதி, குருநகர்).
v, 26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 15., அளவு: 18×12.5 சமீ.
யாழ்ப்பாணம் இறைவாக்குப் பணியகத்தின் அனுசரணையுடன் விரியும் இந்நூலின் ஆசிரியர் கவிஞர் வாகரைவாணன், யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியராகப் பணிபுரிந்த வேளையில் எழுதப்பெற்றது. புனித அந்தோனியாரின் வாழ்வை கவிதை உருவில் வழங்கியிருக்கிறார். அறவழியில் ஆன்மீகப் பாதையில் மக்களை அழைத்துச் சென்ற கிறீஸ்து பெருமானின் உண்மையான சீடராக வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை சுவைமிகு இலக்கியமாக அமைந்திருக்கிறது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97166).