9131 தம்மபதம்: தமிழ்ப் பதிப்பு.

எம்.என்.மொஹிதீன் (மொழிபெயர்ப்பாளர்). கண்டி: பௌத்த பிரசுர வெளியீட்டுக் கழகம், தபால் பெட்டி எண் 61, 54, ஸங்கராஜ மாவத்தை, 1வது பதிப்பு, 2004. (கண்டி: டிஜிட்டல் நிறுவனம்).

x, 126 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-24-0260-3.

கி.மு. 500களில் தொகுக்கப்பெற்ற அறவழி என்னும் அர்த்தத்தைத் தரும் தம்மபதம் என்ற இந்நூல் பௌத்தர் மத்தியில் மிகவும் பிரசித்தமான தர்மநூலாகும். இது பௌத்த பிடகங்களில் ஒன்றான சுத்தபிடகத்தைச் சேர்ந்த குத்தக நிகாயம் என்ற நூலின் ஒரு பகுதியாகும். பாளி மொழியில் 423 சூத்திரங்களாக 26 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புத்தர் பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாலான இது பௌத்த மதத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் அமைகின்றது. வளர்ச்சியடைந்த பல உலக மொழிகளில் தம்மபதமானது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரட்டை வர்க்கம், நுண்ணவதான வர்க்கம், மனோ வர்க்கம், புஷ்ப வர்க்கம், மூடர் வர்க்கம், அறிஞர் வர்க்கம், அரஹத் வர்க்கம், ஆயிரம் வர்க்கம், பாவ வர்க்கம், தண்ட வர்க்கம், முதுமை வர்க்கம், ஆத்ம வர்க்கம், உலக வர்க்கம், புத்த வர்க்கம், சுக வர்க்கம், பிரிய வர்க்கம், குரோத வர்க்கம், மல வர்க்கம், நியாய வர்க்கம், மார்க்க வர்க்கம், பலவித வர்க்கம், நரக வர்க்கம், யானை வர்க்கம், இச்சை வர்க்கம், பிக்கு வர்க்கம், பிராமண வர்க்கம் ஆகிய 26 தலைப்புகளில் இந்நூலில் தம்மபதத்தின் பாளிச் செய்யுள்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 197741).

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Für nüsse Zum besten geben

Content Faqs: Faq Dahinter Book Of Ra Novomatic Spielautomatentests Keine Kostenlosen Spiele Novoline Verbunden Spielbank Unser Geräte Unterstützt Das Sizzling Hot Slot?: Casino 1 Ecu