9133 அறநெறிக் காலமும் தமிழகப் பண்பாட்டு மரபுகளும்.

சி.பத்மநாதன், க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன், (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xx, 494 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9233-18-3.

1992ஆம் ஆண்டுமுதல் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், வருடாந்த இந்து சமய தமிழிலக்கிய ஆய்வரங்குகளை நடத்திவருகின்றது. 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 22 முதல் நான்கு நாட்கள் நீதிநூல்கள் எழுந்த காலமாகிய கி.பி. 300-600 ஆண்டுக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு   ஒரு ஆய்வரங்கு இடம்பெற்றது. இவ்வாய்வரங்கின்போது சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். தொல்லியலும் வரலாறும் என்ற முதற் பிரிவில் புதிய அரசுகளும் சமய மரபுகளும்: தமிழகத்தில் பௌத்தம் (சி.பத்மநாதன்), களப்பிரர் வரலாறு (சொ.சாந்தலிங்கம்), Memorial Stones of Tamil Nadu-A Case Study of life after Death (K.Rajan), Archaeological Excavations of Porunthal (K.Rajah), ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சமயமும் சமூகமும் என்ற இரண்டாம் பிரிவில் அறநெறிக்கால இலக்கியங்களில் வைணவம் (சு.வேங்கடராமன்), பலதேவன் வழிபாடு (சு.வேங்கடராமன்), சிலப்பதிகாரம் மணிமேகலை சித்திரிக்கும் விழாக்கள் (வசந்தா வைத்தியநாதன்), அறநூல்களில் பெண்கள் (செ.யோகராசா), சிலப்பதிகாரம் புலப்படுத்தும் சைவ நெறி (மா.வேதநாதன்), பக்தி இலக்கிய மரபில் காரைக்கால் அம்மையார் (ம.நதிரா), சங்கம் மருவிய காலத்தில் சைவம் (விக்னேஸ்வரி பவநேசன்), களப்பிரர் ஆட்சியில் வைதீக சமயம் (சு.துஷ்யந்த்), நாலடியாரில் பெண்கள் (செல்வகுமார் சிவலிங்கம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலக்கியமும் கலையும் என்ற பிரிவில் அறநெறிக்கால இலக்கியங்கள்-சில விவாதங்கள் (சு.வேங்கடராமன்), கவிதையாக்க நோக்கில் அற இலக்கியங்கள் (பழ.முத்து வீரப்பன்), அறநெறிக்கால அழகியற் சிந்தனை (ஏ.என்.கிருஷ்ணவேணி), அறநெறிக்கால இலக்கியங்களின் அழகியல் அரசியல் (க.இரகுபரன்), ஆய்வு நோக்கில் திருக்குறள் அதிகாரங்கள் (ஸ்ரீ பிரசாந்தன்), திருக்குறளில் இழையோடியுள்ள அறிவாராய்ச்சியியல் நுட்பங்கள் (ச.முகுந்தன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இலக்கியமும் அறமும் என்ற இறுதிப் பிரிவில் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் காட்டும் அரசியல் அறம் (பழ.முத்து வீரப்பன்), நான்மணிக் கடிகை (பழ. முத்துவீரப்பன்), அறம்: தமிழிலும் வடமொழியிலும் (வி.சிவசாமி), ஆசாரக் கோவையும் அறமும் (வ.மகேஸ்வரன்), பழமொழி நானூறும் சமூக நோக்கும் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), அற இலக்கியங்களில் நட்பு (றூபி வலன்ரீனா பிரான்சீஸ்), சிறு பஞ்சமூலம் சித்திரிக்கும் ஒழுக்கவியல் (சுகந்தினி சிறிமுரளிதரன்), அறநெறிக்கால இலக்கியங்கள் காட்டும் விருந்தோம்பற் பண்பு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் (ம.பாலகைலாசநாத சர்மா), ஏலாதியும் மனித நேயமும் (சாந்தி கேசவன்), நன்றே வாழ்க அன்றேல் மாழ்க (மா.ரூபவதனன்), சிங்கள இலக்கியங்களில் தமிழ் நீதி இலக்கியங்களின் செல்வாக்கு (தம்மிக்க ஜயசிங்க) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Finest Pennsylvania Web based casinos 2024

Posts A knowledgeable United states Casinos on the internet Compared Regulated Compared to Overseas Online casinos Acceptance Incentives An educated Odds Inside Gambling games For

Bank slots: online voor optreden

Capaciteit Hoofdsieraa Gokhal | Gopher Gold beoordeling RTP van gelijk online gokkast vs. zeker fysieke gokkast Het Rondspeelvoorwaarden van het kroon casino welkomstbonus Kasteel materieel