9136 இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம்: தமிழர் வாழ்வில் சித்த மருத்துவம்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்,  430, கே.கே.எஸ்.வீதி).

xxiv, 148 பக்கம், படங்கள், விலை: ரூபா 175., அளவு:  18×12.5 சமீ.

ஆலயங்களில் வெறும் சம்பிரதாயம், சாஸ்திரம், வழக்கம் என்று கூறிப் பின்பற்றப்படும் பல விடயங்களுக்கு விஞ்ஞானரீதியில் விளக்கங்கள் கொடுப்பதன் மூலம் இவற்றை மூடநம்பிக்கைகள் என்ற தவறான கருத்துக்களைத் தகர்த்தெறிந்துள்ளார். இந்துக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய பல விடயங்கள் இந்நூலில் தெளிவான எளிய உரைநடையில் எழுதப்பட்டுள்ளன.  ஆலய அமைப்பு (அறிமுகம், ஆலயச் சூழல், ஆலய அமைப்பு, விக்கிரகங்கள், அஷ்டபந்தனம்), கிரியைகள் (ஹோமம், தருப்பை, அபிடேகத்தின் மகிமை, பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம், பஞ்ச கௌவியம், முத்திரைகள்), வழிபாட்டு முறைகள் (வணக்க முறைகள், அரசமர வழிபாடு, உளவளத்துணை, திருவிழாக்கள்), பிரசாதங்கள் (விபூதி, சந்தனம், குங்குமம், நைவேத்தியம்-போசாக்குணவு, விரதங்கள்), திருநந்தவனங்கள் (திருக்கோவில் நந்தவனங்கள், மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்), முடிவுரை ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 158860).

ஏனைய பதிவுகள்

13021 அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017.

13021அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017. ந.பேரின்பநாதன் (மலராசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம்இ 681இ காங்கேசன்துறை வீதி).201 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ