9147 கந்தனே கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி வெளியீடு, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சிவா பிரிண்டர்ஸ், கைதடி).

xxi, 178 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 17.5×12 சமீ.

ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் எழுதிய சமயக் கட்டுரைகளின் தொகுப்பு. கந்தனே கலியுகத்தில் கண்கண்ட தெய்வம், கதிரமலைக் கந்தன் செய்த அற்புதங்கள், கந்தனுக்கு வேர்க்குமா?, வயிற்றுவலி நீக்கிய பெருமான், கட்டபொம்மனைத் திருத்திய கந்தன் கருணை, நேர்த்திக்கடனை மறந்த குடும்பம், பாம்பன் சுவாமிகள் பரவிய முருகன், ஊமையும் பேசுவான், முருகன் சரிதையை முருகனே சரிபார்த்தான், நக்கீரருக்கருளிய முருகன், அயனுக்கு ஆணவம் போக்கிய முருகன், செந்தூர்த் தல புராணம் பிறந்த கதை, டச்சு வர்த்தகரும் செந்தூர் முருகனும், செந்தில் ஆண்டவனும் பாளையக்காரரும், பகழிக்கூத்தர் குறிப்பிடும் மூன்று அற்புதங்கள், எனது தந்தையார் கண்ட கதிர்காம முருகன், அரிவைக்குக் கரம் உதவிய முருகன், தேவதாசிக்கருளிய வெற்றிவேல், ஆதிசங்கரருக்கு அருளிய முருகன், விஸ்வாமித்திர முனிவருக்கு பிரசாதம், ஐந்தொழில் புரியும் செந்தூர் முருகன், வல்லூர்த் தேவராயர், பழநிமலை பக்தர்கள், சுவாமிமலை அடியார்கள், சுருளிமலை அற்புதங்கள், இலஞ்சி முருகன் பெருமை, குறைகள் தீர்க்கும் குன்றக்குடிப் பெருமான், விராலிமலையுறை வீரவேல் முருகன், வயலூரில் முருகன், வைத்தீஸ்வரன் திருவிளையாடல், நினைக்க நோய்தீர்க்கும் திருத்தணி, ஒளவைக்கருளிய முருகன், அகத்திய முனிவருக்கு அருளிய முருகன், நல்லூர்த் தேரடி, செல்லச்சந்நதியானின் சீரிய அற்புதங்கள் ஆகிய 41 கட்டுரைகளை இந்நூலில் காணலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 77300).

ஏனைய பதிவுகள்

Online Spielbank

Content Koi princess kostenlose Spins 150: Abonnieren Diese Diesseitigen Newsletter & Verweilen Diese Auf Diesseitigen Social The Cube Hakt Auf: Gerüchte Um Landkäufe Ein Soros

10976 பூர்வீக நோக்கில் புதுக்குடியிருப்பு.

அனற் சர்மிளா அன்ரன் யூட் டொளஸ் (தொகுப்பாசிரியர்). லண்டன்: பழைய மாணவர் சங்கம், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி-முல்லைத்தீவு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (முல்லைத்தீவு: அஸ்மி பிரின்டர்ஸ், புதுக்குடியிருப்பு). xxviii, 180 பக்கம், வண்ணப்படங்கள்,