9150 சமய நோக்கில் தமிழ் இலக்கியச் சிந்தனைகள்.

சோமசுந்தரம் பரமசாமி. இணுவில்: சோ.பரமசாமி, மருதா மனை, இணுவில் தெற்கு, 1வது பதிப்பு, 2010. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி).

viii, 84 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.

துன்ப விடுதலை, எல்லாம் சிவன் செயலென் றெண்ணாரோ, ஞானத்தின் திருவுரு, வாடா மல்லிகை, பட்டினம் பெறினும் வாரேன், இளங்கோவின் குரல், உறுதியே உயர்ந்த குறிக்கோள், பைந்தமிழ்ச் சோலையில் பௌத்த நெறி, எங்கெழிலென் ஞாயிறு, சிவராத்திரி மகிமை, அம்மானுக்காளான ஆரூரன், அன்பு நெறியை நயந்த காளத்தி அப்பரின் அற்புதக் காட்சி ஆகிய 12 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்நூலாசிரியர், காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் தன் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவரும் விஞ்ஞானப் பட்டதாரியும் ஓய்வுபெற்ற அரசாங்க மொழி பெயர்ப்பாளரும் சைவசமயக் கோட்பாடுகளில் பற்றுறுதி கொண்டவருமாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 213412)

ஏனைய பதிவுகள்

ROBIN Bonnet

Blogs Females Robin Bonnet RTP – The fresh Come back to Player for this Slot are 94% Related slots Ideas on how to Sign up