9149 சம்பந்தர் படைப்பாளுமை.

க.இரகுபரன். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

xiii, 216 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-9233-25-1.

இன்றைய தமிழ் மரபில் தமிழர் போற்றிப் பின்பற்றும் சைவநெறி, சமய குரவர் நால்வரின் பாடல்களை அடிப்படையாகக் கொண்டது. சமய குரவர்களுள் ஒருவரான சம்பந்தர் தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழர் வரலாற்றிலும் தடம் பதித்தவர். அவரைப்பற்றிய இலக்கியங்களையும் அவர் பாடிய பதிகங்களையும் ஒப்பியல் நோக்கில் ஆய்வு செய்தமையின் பயனாக அமைந்த இந்நூல் அறிமுகவுரை அடங்கலாக ஏழு அத்தியாயங்களை உள்ளடக்கியது.  பக்தி இலக்கிய வடிவமான தேவாரம், சம்பந்தர் பதிகங்களின் பொதுப்பண்பு, அவரின் திருக்கடைக் காப்புச் செய்யுள்கள்,  சம்பந்தரின் மிறைக் கவிகள்,  அவரது அற்புதப் பதிகங்கள், அவரது ஆளுமை ஆகிய பிரதான விடயங்கள் இந்நூலில் இலக்கிய நோக்கில் ஆராயப்பட்டுள்ளன.  புலமை மிகு ஆய்வாளர், இரகுபரன் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆய்வுப்பிரிவில் 1995இல் ஆராய்ச்சி உத்தியோகத்தராக இணைந்தது முதல் தொடர்ந்தும் சேவையாற்றுகின்றார். பின்னாளில் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளராகக் கடமையேற்றதன் பின்னரும் திணைக்களத்தொடர்பினைப் பேணிவருபவர். இந்துக் கலைக்களஞ்சியத்தின் உருவாக்கப்பணிகளிலும், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பதிப்புத்துறைப் பணிகளிலும் தம்மை ஆர்வத்துடன்  ஈடுபடுத்திக் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

Score 45M Free Gold coins

Posts 100 percent free spins no deposit What you should Look out for in an internet 100 percent free Play Incentive No deposit Bonuses Inside