வ.குகசர்மா. தெல்லிப்பழை: இந்து சமய விருத்திச் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1979. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
xvi, 88 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
பௌராணிக வித்தகர் வ.குகசர்மா அவர்கள் ‘ஈழநாடு’ பத்திரிகையில் எழுதிய ஞானத்தமிழ் என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடரின் நூல்வடிவம் இதுவாகும். சைவமும் வைஷ்ணவமும் தமிழில் கலந்து ஞானத்தமிழாக உருவானவகையை இக்கட்டுரைகளின் வாயிலாக ஆசிரியர் புலப்படுத்தியிருக்கிறார். ஆசிரியர் ‘பாவான்ஸ் ஜேர்னல்’ என்ற ஆங்கில ஆன்மீக இதழில் எழுதிய சில கட்டுரைகளும் இந்நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97998).