சிவ.சண்முகவடிவேல். ஏழாலை: ஆத்மஜோதி தியான மணிமண்டப வெளியீடு, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: ஜய்ராம் பிரின்டர்ஸ், வெலிங்டன் சந்தி).
(8), 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
சிவத்தொண்டர் சிவ.சண்முகவடிவேல் அவர்கள் எழுதிய ஆன்மீகக் கருத்துக்கள் பொதிந்த நூல் இதுவாகும். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் மாவைஆதினம் மஹாராஜ ஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள் இந்நூலுக்கு வழங்கிய ஆசியுரையில் இறைவனிடம் அழகு தமிழில் பாடி ஆனந்தக் கண்ணீர் சிந்தி அன்புக் கடவுளின் திருவடி நிழல் வேண்டி தியானம் செய்யும் ஒருவராக நூலாசிரியரைக் காண்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 190382