9179 சைவ போதினி-நான்காம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 14வது பதிப்பு, ஜனவரி 1979, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1960. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சியந்திரசாலை).

80 பக்கம், விலை: ரூபா 1.80, அளவு: 18.5×12 சமீ.

விவேகானந்த சபையினர் தாங்கள் அகில இலங்கை அடிப்படையில் ஆண்டுதோறும் நடத்திவரும் சைவ சமய பாடப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குப் பயனுற வேண்டியும், இலங்கை அரசாங்க கல்வித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் இந்நூல் எழுதப்பட்டது. திருஞான சம்பந்தர் தேவாரம், சைவ சமயம், திருக்கேதீசுவரம், அகத்தியரும் பிள்ளையாரும், திருநாவுக்கரசர் தேவாரம், திருநீறு, திருக்கோணேசுவரம், முருகக் கடவுளும் ஒளவையாரும், சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம், நித்திய கருமம், கதிர்காமம், சம்பந்தர் ஞானப்பாலுண்டது, மாணிக்கவாசக சுவாமிகள் தேவாரம், கோயிலுக்குச் செல்லுதல், மாவிட்டபுரம், அப்பர் சூலை நோய் தீர்ந்தது, பெரியபுராணம், கோயில்களைச் சுத்தஞ்செய்தல், சுந்தரரைத் தடுத்தாட்கொண்டமை, அருணகிரிநாதர் திருப்புகழ், பூந்தோட்டம், செம்மனச் செல்வியார், திருமந்திரம், மூதுரை ஆகிய 24 பாடங்களாக இந்நூல் வகுத்துத் தரப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14162 மட்டுவில் வடக்கு பன்றித்தலைச்சி அம்மன் கோயில் கும்பாபிஷே சிறப்புமலர்.

மலர்க் குழு. மட்டுவில்: பன்றித்தலைச்சி அம்மன் கோவில், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2007. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). (6), 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,