9193 சக்தி சிவனின் அருளாட்சி.

ஆ.கதிர்காமத்தம்பி. தொண்டைமானாறு: சைவ கலை பண்பாட்டுப் பேரவை, சந்நிதியான் ஆச்சிரமம், 1வது பதிப்பு, ஆவணி 2001. (தொண்டைமானாறு: சந்நிதியான் அச்சகம், சந்நிதியான் ஆச்சிரமம்).

xviii, (3), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ.

சக்தி சிவனின் நவபேத ஆட்சிச் சருக்கம், சக்தி சிவனின் அருள்மூர்த்தங்களின் சருக்கம் (தட்சணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரமூர்த்தி,  கல்யாண சுந்தரமூர்த்தி,  சோமாஸ்கந்தமூர்த்தி,  இலிங்கோற்பவமூர்த்தி,  பிக்ஷாடணமூர்த்தி,  உமாமகேசுவரமூர்த்தி,  நடராசமூர்த்தி), சக்தி சிவனின் அருளாட்சிச் சருக்கம்-இந்தியாவில் (காசி, திருக்காளத்தி, திருத்தில்லை, திருஆலவாய்-மதுரை, இராமேசுவரம், திருத்தோணிபுரம்-சீர்காழி, திரு அருணாசலம்-திருவண்ணாமலை, திருப்பெருந்துறை, திருவாரூர், திருக்கச்சியேகம்பம், திருவீரட்டானம், திருவையாறு, திருமறைக்காடு), சக்தி சிவனின் அருளாட்சிச் சருக்கம்- ஈழத்தில் (திருக்கோணேசுவரம், நகுலேசுவரம், முன்னேசுவரம், திருக்கேதீசுவரம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீசுவரம், கொக்கட்டிக்சோலைத் தான்தோன்றீசுவரம், வண்ணை வைத்தீசுவரம், சட்டநாதர் கோவில், கொழும்பு பொன்னம்பலவாணேசுவரம், வல்வை வைத்தீசுவரம்), ஈழத்துச் சிதம்பரம்- காரைநகர் ஆகிய விடயத் தலைப்புகளில் ஆலயங்கள், அவை சார்ந்த அதிசயங்கள் போன்ற தகவல்களுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131203).         

ஏனைய பதிவுகள்