9194 தென்னிலங்கையின் புராதன இந்துக் கோயில்கள்: பாகம் 1.

என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2010. (கொழும்பு 11: அனுஷ் பிரிண்டர்ஸ்).

xx, 384 பக்கம், புகைப்படம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ.

தென்னிலங்கையில் சிறந்து விளங்கிய புராதன இந்துக் கோயில்கள் பற்றி இந்நூல் விளக்குகின்றது. கோயில் கட்டிட அழிபாடுகளின் எச்சங்கள், இலக்கிய ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தென்னிலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் ஆய்வுப்பயணம் மேற்கொண்டு தற்பொழுது முழுமையாகவோ அன்றி, பகுதிகளாகவோ உருமாறிவிட்ட பல இந்து ஆலயங்களின் புராதன சிறப்புகளை விளக்கமுற்படுகின்றார். வாசகருக்கு நிச்சயம் நீண்ட பெருமூச்சினை ஏற்படுத்தும் வரலாற்றுச் சான்றாதாரங்கள் வண்ணப் புகைப்படங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒருகாலத்தில் பெருமைமிகு சைவாலயங்களாக இருந்த பல கட்டிடங்களின் அழிபாடுகள் ஏக்கப் பெருமூச்சை வரவழைக்கின்றன. கோட்டே, இரத்மலானை, ஹோமாகம, களுபோவில, மொரட்டுவை, கொழும்பு, ஹங்வெல்ல, பிலியந்தலை, கொட்டாவ, நவகமுவ, கொச்சிக்கடை, பத்தரமுல்ல, நீர்கொழும்பு, வத்தளை, களனிய, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை, மாத்தளை, கண்டி, நுவரெலிய எனப் பல்வேறு இடங்களில் இவ்வாய்வுப்புலம் விரிவுகண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50005).

ஏனைய பதிவுகள்

14001 நுண்ணறிவு: போட்டிப் பரீட்சைக்குரிய உள ஆற்றலும் நுண்ணறிவு அளவீடும்.

தி.லோகநாதன். கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ், 5வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1999, 2வது பதிப்பு, 2004, 3வது பதிப்பு, 2005, 4வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: