9243 ஏக்கத்தில் ஆக்கம்: தொகுப்பு.

நிமலன் (இயற்பெயர்: அரியபுத்திரன் நிமலன்). சுவிட்சர்லாந்து: அரியபுத்திரன் அறக்கட்டளை, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600002: டாப் ஸ்டார் பிரஸ், நெ.20, இராஜகோபாலன் தெரு, சிந்தாரிப்பேட்டை).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவின்போது அன்பளிப்பாக வழங்குவதற்காக ஏழு நாட்களில் எழுதி முடிக்கப்பட்ட நூல் எனவும், நண்பர்களோடும் உறவினர்களோடும் நடைமுறையில் நாம் செய்யும் சமூகத் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டதெனவும்  தன் முன்னுரையில் குறிப்பிடும் நூலாசிரியர், கதையாக எழுதத் தொடங்கி அதனை முடிக்கும் வேளை கட்டுரையாக அமைந்துவிட்ட நிலையையும் கண்ணுறுகின்றார்.  வரலாற்றில் புங்குடுதீவின் ஒரு கண்ணோட்டம், கல் தோன்றி…, தமிழில் வழிபாட்டை மறுக்கும் தமிழ் நிர்வாகங்கள், விநாயகர் வழிபாடும் விமலாவின் வாழ்வும், இரண்டும் உண்டு, வேதனையிலும் சாதனை, ஊரும் உறவும், எதற்கு வந்தாய், தரிப்பிடமும் தமிழரும், பேதங்கள், தந்தையும் தென்னையும், புழுக்கம், சாமத்தியச் சடங்கு, விழித்திட வேண்டாம் ஆகிய 14 தலைப்புகளில் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

13815 ஈழத்துத் தமிழ் நாவல்களில் இன உறவு.

மயில்வாகனம் இரகுநாதன். யாழ்ப்பாணம்: ம.இரகுநாதன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 2007. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். பிரின்டர்ஸ், 288B, பலாலி வீதி, கந்தர்மடம்). ix, 100 பக்கம், விலை: