9246 நேற்றுப் போல இருக்கிறது.

கே.எஸ்.பாலச்சந்திரன். தெகிவளை: கனகா பதிப்பகம், 1வது பதிப்பு, மே 2011. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

x, 221 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 450., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-0210-05-3.

இந்த நூலில் 36 உரைச் சித்திரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நமது இழப்பையும் கடந்த காலத்தின் இனிமையையும் சுட்டுகின்றன. சிறு வயதில் நாடகம் நடத்தும் ஆசைகளையும், சைக்கிள் பழகும் நாடகத்தையும், அந்தக் காலத்து எலக்சனையும், விசிலடித்த காலத்தையும், கிராமத்தில் நடந்த பணச்சடங்குகளின் ஏமாற்றத்தையும், திருவிழாக் கோளிக்கைகளையும், கிராமபோன்களையும்  சுவையாகச் சித்திரிக்கின்றார். நாம் இழந்துவிட்ட நம் இளமைக் காலத்தை நினைவு படுத்த ஆசிரியர் இந்த 36 உரைச்சித்திரங்களையும் திருப்திகரமாகப் பயன்படுத்தியுள்ளார். இயல்பான நகைச்சுவை உணர்வினை வெளிக்காட்டும் இவரது படைப்புகள் புகலிடமெங்கும் அண்ணை ரைட் பாலச்சந்திரனின் நூல்களை ஆர்வத்துடன் விரும்பி வாசிக்கவைத்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 218708).

ஏனைய பதிவுகள்

16090 மன்னார் சிவபூமி.

மறவன்புலவு க.சச்சிதானந்தன். சாவகச்சேரி: காந்தளகம், மறவன்புலவு, 2வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). 862 பக்கம், விலை: ரூபா 2500., அளவு: 22×15  சமீ.,

16496 என் சுவாசக் காற்றே : தன்முனைக் கவிதைகள்.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மெகா பதிப்பகம், 41, றக்கா வீதி, கச்சேரியடி).