9249 யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் (1920களில்).

அ.கௌரிகாந்தன். யாழ்ப்பாணம்: சாளரம் வெளியீடு, வேம்படி வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (யாழ்ப்பாணம்: நியு ஈரா பப்ளிக்கேஷன்ஸ், 267, பிரதான வீதி).

(4), 39 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71604).

யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் (1920களில்).

அ.கௌரிகாந்தன். United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ,  2வது பதிப்பு, மே 2013,  1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (சென்னை 6000005: சுவடி).

86 பக்கம், விலை:  இந்திய ரூபா 50., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-80244-98-3.

1920களில் யாழ். குடாநாட்டில் நிகழ்ந்த சமூக உருவாக்கத்தினை முதன்மை மையப் பொருளாகக் கொண்டு, அச்சமூக உருவாக்கத்தில் பங்காற்றிய சிந்தனைப் போக்குகளின் பிரதிநிதிகளில் கனதியான பாத்திரத்தை வகித்த யாழ்.வாலிபர் காங்கிரஸ் குறித்தும் அவ்வமைப்பின் பங்களிப்பாளர்களுள் ஒருவராக இருந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விபுலானந்தரின் பங்கு குறித்தும் இந்நூல் பேசுகிறது. இந்நூலின் முதற்பதிப்பு வெளிக்கொண்டுவரப்பட்ட 1992 ம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தின் அந்நிய நேரடி இராணுவத் தலையீட்டை எதிர்கொள்வதின் போதான பேரிழப்பகளின் பின்னால், தமிழீழ அரசு மீளவும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.  அந்நிய இராணுவத் தலையீடும் அதை வெற்றிகொள்ள புலிகள் இயக்கத்தால் கடைப்பிடிக்கப்பட்ட இராணுவ, அரசியல் வழிமுறைகளும், பல படிப்பினைகளை தமிழ் பேசும் மக்களுக்கும், புலிகள் இயக்கத்திற்கும் கொடுத்திருந்தன. இப் படிப்பினைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் அரசியல் சிந்தனைப் போக்குகளை தமிழ்பேசும் மக்களிடையேயும், புலிகள் இயக்கத்திற்குள்ளேயும் தோற்றுவித்தன.  புலிகள் இயக்கத்துள் ஆக்கபூர்வமான, சுமுகமான ஓர் உட்கட்சிப் போராட்டம் ஆரம்பமானது என்றும் கூறலாம். இது புலிகள் இயக்கத்திற்கு முற்றிலும் புதியதோர் மரபாகும். புலிகள் இயக்கமும் இதைப் புரிந்துகொண்டிருந்தது.  மறுபிறப்பெடுக்க முயற்சித்தது. அதற்கான வழிமுறைதான் மேற்குறிப்பிட்ட உட்கட்சிப் போராட்டமாகும். இம்முயற்சிகளின் வெளிப்பாடுகளில் ஒரு துளிதான் இந்நூல் எனலாம்.

ஏனைய பதிவுகள்

16823 இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள் (பாகம் 1).

அகணி (இயற்பெயர்: சி.அ.சுரேஸ்). கனடா: சி.அ.சுரேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (கனடா: சாமந்தி இல்லம், மல்ரிசிமாட் சொலியூசன்ஸ்). 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9869016-5-2. கனடா தமிழ்

50 free spins no deposit now offers Get 2024

Posts Video game restrictions Current No-deposit Incentive Requirements Wild Casino Better Slots 100percent free Revolves No-deposit Incentives In reality, more info on pages are embracing