9250 வணிகர் வரலாறு.

மு.வே.சீவரத்தினம். வட்டுக்கோட்டை: பாட்டா வமிசவழியினர் சங்கம், சிந்துபுரம், 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

குலம் நான்கு, தமிழர் நாகரிகம், வணிகர் வரலாறு, உணவு, சமயம், தாய்மொழிப் பற்று, குணங்குறிகள், வேண்டுதல், உலக அரங்கிலே, முடிவுரை ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  காந்தீயவாதியான நூலாசிரியர் கொழும்பு சாகிராக் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி, போன்ற உயர் கல்லூரிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். கல்வித் திணைக்களத்தில் வித்தியாதரிசகராகக் கடமையாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84565).

ஏனைய பதிவுகள்

15804 கலைகளுக்கெல்லாம் அரசு கவிதை.

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: பாக்கியம் சிவசோதி பதிப்பகம், வள்ளுவன்மேடு வீதி, திருப்பழுகாமம்-01, 1வது பதிப்பு, ஜுன் 2015. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி). x, 67 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15