9270 மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை.

கமலினி கணேசன். கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 253 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.

மூன்று பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்வாய்வின் முதற்பகுதியில் மலையகப் பெண்கள் என்ற பொருள் வகுப்பு, ஆய்வின் முறையியலும் ஆய்வனுபவமும், கடந்தகால ஆய்வுகளும் அவற்றின் தாற்பரியமும் ஆகிய மூன்று விடயங்கள் பேசப்படுகின்றன. இரண்டாம் பகுதியில் மலையக மக்களும் இனத்துவமும், மாறிவரும் மலையகமும் பெண்களும் ஆகிய இரு விடயங்களும், மூன்றாம் பகுதியில் அரசியற் பொருளாதாரமும் பால்நிலையும், பால்நிலைக் கருத்தியற்பாற்பட்ட தொழிற்படி முறைமை, கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் அர்த்தப்படல், வேலை: காலநெரமும் ஊதியமும்: ஒரு பால்நிலைக் கணிப்பீடு, குடும்ப அமைப்பில் பால்ரீதியான தொழிற்பிரிவு, தொழிற்சங்கங்களும் பெண் தொழிலாளர்களும் வரலாறு, தொழிற்சங்கங்களின் இயக்கமும் அவற்றில் பெண்களின் இருப்பும் ஆகிய விடயங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39487).

ஏனைய பதிவுகள்

Tablet Position Online game

Posts You are Struggling to Access Playusa Com You’re Struggling to Availability Added bonus Com Real-time Gaming RTP is short for the brand new portion