9269 பெண்களும் தொடர்பு ஊடகங்களும்.

சாந்தி சச்சிதானந்தம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 8: முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி, 159 கின்சி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

x, 112  பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14 சமீ.

ஜனவரி 1990, 19ஃ21ம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்ற தமிழில் எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு. அன்பெரியா ஹனீபாவின் வரவேற்புரையுடன் தொடங்கிய இக்கருத்தரங்கு ஆறு அமர்வுகளில் இடம்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியமும் பெண்களும்: சில சவால்கள் (மௌ.சித்திரலேகா), காண்பதும் கேட்பதும்: வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் பெண்களின் உருவகங்கள் (சாந்தி சச்சிதானந்தம்), பால் அடிப்படையில் அமைந்த தொழிற் பாகுபாடு (மௌ.சித்திரலேகா), வெளிநாட்டுச் செலாவணிச் சம்பாத்தியத்தில் பெண்களின் பங்களிப்பும் சமுதாயத்தில் அவர்கள் பெறும் கணிப்பும் (சிரோன்மணி இராஜரத்தினம்), பெண்களும் இம்சையும்: ஒரு கலந்துரையாடல் (யோகா பாலச்சந்திரன்) ஆகிய ஐந்து கட்டுரைகள் ஐந்து அமர்வுகளிலும் வாசிக்கப்பட்டதையடுத்து அமர்வு ஆறு குழுநிலை விவாதமாகவும், வினா விடை நிகழ்வாகவும் அமைந்தது. இவை அனைத்தும் இத்தொகுப்பில் எழுத்துருவில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Aparelhar Busca

Content Melhores Sites Criancice Caça Níqueis Onde Você Pode Aparelhar Valendo Bagarote Que Aparelhar Busca Niquel Gratis Puerilidade Aspecto Segura? Nestes Cassinos Você Pode Acreditar