9293 ஆசியாவில் வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில்களுக்கான சிறந்த நடைமுறை அணுகுமுறைகள்.

சேன எஸ்.டி.சில்வா, உபாலி எஸ்.அமரசிங்க, துய் T.T.நுயென். (தொகுப்பாசிரியர்கள்), M.M.M.நாஜிம், M.S.Nஹ{ஸ்னா (தமிழாக்கம்).அவுஸ்திரேலியா: Australian Centre for International Agricultural Research, GPO Box 1571, Canbera ACT 2601, 1வது பதிப்பு, 2009.(சிறீலங்கா: குவாலிட்டி பிரின்டர்ஸ், 17ஃ2, பெங்கிரிவத்தை வீதி, கங்கொடவில, நுகேகொட).

118 பக்கம், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில்கள் அபிவிருத்தியும் முகாமைத்துவமும் என்ற முதலாம் பகுதியில், வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில்கள் ஏன், வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில்கள் என்றால் என்ன?, வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில்கள் எங்கே அபிவிருத்தி செய்யப்படுகின்றன, சிறந்த நடைமுறை அணுகுமுறை என்றால் என்ன மற்றும் ஏன் அது அவசியப்படுகின்றது என்பன பற்றி விளக்கப்படுகின்றது. கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளாக, சமூக ஆலோசனைகள், நீர்நிலைகளைத் தேர்ந்தெடுத்தல், இனங்களைத் தேர்ந்தெடுத்தல், வைப்புச் செய்வதற்கு முன்னர் தயார்படுத்துதல், வைப்புச் செய்தல் பருமன், வைப்புச் செய்தல் அடர்த்தி, குறைநிரப்பி உணவும் உணவூட்டலும், அறுவடை உபாயங்கள், சந்தைப்படுத்தல் என்பன விளக்கப்படுகின்றன. பாதுகாப்பு முறைகள் பற்றி விபரிக்கையில் முற்கூற முடியாத சந்தர்ப்பங்களிலிருந்து பாதுகாப்பு,அனுமதியின்றி மீன்பிடித்தலிலிருந்து பாதுகாப்பு, ஊனுண்ணி விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, சந்தைப் பாதுகாப்பு ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் மூன்று முன்னாய்வுகள் இடம்பெற்றுள்ளன.  இலங்கையில் வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில் அபிவிருத்தி: ஓர் முன்னாய்வு, வியட்நாம் வளர்ப்பு அடிப்படையிலான மீன்பிடித் தொழில் அபிவிருத்தி: ஓர் ஆய்வு, சந்தைப்படுத்தற் சந்தர்ப்பம்: மீனிற்கான கேள்வியைப் புரிந்துகொள்ளல் ஆகிய மூன்று முன்னாய்வுகள் இதில் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 6345).

ஏனைய பதிவுகள்

Freispiele abzüglich Einzahlung 2024

Content Spiele: crazy monkey Online -Slot Kasino Kingdom Jokercasino bietet allwöchentlich drehstange Angebote ferner Bekannte persönlichkeit Betreuung an Dies Book of Dead Kasino Durchlauf hat