9298 சிறுவர் சட்டங்கள்.

செ.செல்வகுணபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 238 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-417-1.

குடியியல்சார் விடயங்கள், குற்றவியல்சார் விடயங்கள் ஆகிய இரு பாகங்களில் இந்நூல் இலங்கையிலும் சர்வதேசத்திலும் உருவாக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான 33 சட்டங்களை விபரிக்கின்றது. சிறுவர் தொடர்பாக பெரும்பாலும்அனைத்துச் சட்டங்களிலும் காணப்படும் சட்ட ஏற்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள  இந்நூலின் நோக்கமானது, பொதுமக்களிடையே சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,  பொலிஸ் அலுவலர்கள், நன்னடத்தைப் பாதுகாவல் அலுவலர்கள் மற்றும் சிறுவர் தொடர்பான சட்ட அமுலாக்கல் அலுவலர்களுக்கு உதவுவதுமாகும். இந்நூல் குடியியல்சார் விடயங்கள், குற்றவியல்சார் விடயங்களென இரண்டு பாகங்களைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. குடியியல்சார் விடயங்களில் குழந்தைப் பிறப்பைப் பதிதல், மகவேற்றல், கல்வி கற்றல், பராமரித்தல் மற்றும் குடும்ப வன்முறைகளில் சிறுவர் நிலை போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. குற்றவியல்சார் விடயங்களில் சிறுவருக்கெதிராகப் புரியப்படும் தவறுகள், சிறுவரால் புரியப்படும் தவறுகள் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கை முறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஒரே பார்வையில் எத்தவறுக்கு எச்சட்டத்தின் கீழ் எத்தகைய தண்டனை விதிக்கப்படலாம் என இலகுவாக அறியக்கூடிய முறையில் அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. சாதாரண மொழிநடையில் அதேவேளை சட்டத்தின் பொருள் மற்றும் கருத்து பாதிக்கப்படாமல் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் செல்லத்துரை செல்வகுணபாலன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தையும் ஐரோப்பாவிலுள்ள சர்வதேச கடல்சார் சட்ட நிறுவகத்தில் சட்ட முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இலங்கை சட்ட வரைஞர் திணைக்களத்தில் சிரேஷ்ட உதவிச் சட்ட வரைஞராகவும் இலங்கைச் சட்டக் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார்.

14A18

சிறுவர் சட்டங்கள். செ.செல்வகுணபாலன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்;, 39, 36ஆவது ஒழுங்கை, திருத்திய 2வது பதிப்பு, 2018, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 250 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-417-1.

குடியியல்சார் விடயங்கள், குற்றவியல்சார் விடயங்கள் ஆகிய இரு பாகங்களில் இந்நூல் இலங்கையிலும் சர்வதேசத்திலும் உருவாக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான 33 சட்டங்களை விபரிக்கின்றது. சிறுவர் தொடர்பாக பெரும்பாலும்அனைத்துச் சட்டங்களிலும் காணப்படும் சட்ட ஏற்பாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள  இந்நூலின் நோக்கமானது, பொதுமக்களிடையே சிறுவர் சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,  பொலிஸ் அலுவலர்கள், நன்னடத்தைப் பாதுகாவல் அலுவலர்கள் மற்றும் சிறுவர் தொடர்பான சட்ட அமுலாக்கல் அலுவலர்களுக்கு உதவுவதுமாகும். குடியியல்சார் விடயங்களில் குழந்தைப் பிறப்பைப் பதிதல், மகவேற்றல், கல்வி கற்றல், பராமரித்தல் மற்றும் குடும்ப வன்முறைகளில் சிறுவர் நிலை போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. குற்றவியல்சார் விடயங்களில் சிறுவருக்கெதிராகப் புரியப்படும் தவறுகள், சிறுவரால் புரியப்படும் தவறுகள் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கை முறைகள் போன்ற பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. ஒரே பார்வையில் எத்தவறுக்கு எச்சட்டத்தின் கீழ் எத்தகைய தண்டனை விதிக்கப்படலாம் என இலகுவாக அறியக்கூடிய முறையில் அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. சாதாரண மொழிநடையில் அதேவேளை சட்டத்தின் பொருள் மற்றும் கருத்து பாதிக்கப்படாமல் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் செல்லத்துரை செல்வகுணபாலன், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தையும் ஐரோப்பாவிலுள்ள சர்வதேச கடல்சார் சட்ட நிறுவகத்தில் சட்ட முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவர். இலங்கை சட்ட வரைஞர் திணைக்களத்தில் சிரேஷ்ட உதவிச் சட்ட வரைஞராகவும் இலங்கைச் சட்டக் கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார். (முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9298).

ஏனைய பதிவுகள்

Casino Commission Procedures

Blogs How to start out with New jersey web based casinos? Best Sweepstakes Gambling enterprises You to Undertake Paypal Online casinos For the Best Commission

11235 நயினை முருகன் பிள்ளைத் தமிழ்.

சு.சி.கதிரவேலு. வவுனியா: சு.சி.கதிரவேலு, கலாச்சாரப் பேரவை, செட்டிகுளம், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: விபுலானந்த அச்சகம்). xii, 80 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18×12.5 சமீ. ஆய்வுரை, அணிந்துரை, பதிப்புரை, நூன்முகம்,