9323 குழந்தைகள் உலகம்.

நா.செல்லப்பா. யாழ்ப்பாணம்: வண்ணார்பண்ணை வடகிழக்கு சனசமூக நிலையம், நீராவியடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

(3), 201 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 18.5×13 சமீ.

பாலர் கல்வி பற்றிய சமகால முக்கியத்துவத்தையும், வரலாற்றுப் பின்னணியையும், அதன் சமூகப் பயன்பாட்டையும், இந்நூல் அழகாக விபரிக்கின்றது.  குழந்தைகள் இல்லம் அன்றும் இன்றும், மொன்ரிசோறி அமைப்பு, உடல் அவயவப் பயிற்சியும் உடல் அசைவுத் திறமை வளர்ச்சியும், இந்திரியப் பயிற்சியும் சங்கீதமும், அறிவுப் பயிற்சி, புதிய குழந்தை-புதிய மனிதன் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பாலர் கல்வி பற்றி இலங்கையில் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட முன்னோடி நுல்களுள் முக்கியமானதாக இந்நூல் கருதப்பட்டிருந்தது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 40439).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

15330 ஏ.எல். 1997 தமிழ் புதிய பாடத் திட்டத்திற்கான உரைநடைத் தொகுப்பு.

எஸ்.எஸ்.ஆனந்தன். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு).  (4), 116 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: