9396 இந்துக் கணித வானியல் மரபு.

ச.முகுந்தன். யாழ்ப்பாணம்: குருஷேத்திரா வெளியீடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்).

xx, 231 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-5341-0-1.

நுழைவாயில் தொடங்கி, சிந்துவெளி நாகரீகத்தில் கணிதவியல், வேத இலக்கியங்களில் இந்து வானியற் சிந்தனைகள் (கல்பசூத்திரங்கள், பக்ஷாலி ஓலைச்சுவடி), சித்தாந்த காலகட்டம் (முதலாம் ஆரியபட்டர், வராஹமிஹிரர், பிரம்மகுப்தர், முதலாம் பாஸ்கரர், லாலா, வரேஸ்வரர், ஸ்ரீபதி, இரண்டாம் பாஸ்கரர்), கேரள கணித வானியல் மரபின் எழுச்சி (மாதவர், பரமேஸ்வரர், நீலகண்ட சோமயாஜி, புதுமனை சோமயாஜி), பிரயோக வானியலும் அவதானிப்பு நிலையங்களும் (வானியல் உபகரணங்கள், சவாய்-ஜெய்சிங், சாம்ராட் இயந்திரம், சஷ்டாம்சம், தக்ஷனோத்திரபீட இயந்திரம், ஜயபிரகாசம், நாடீவலயம், இராமயந்திரம்,சங்கர இயந்திரம், இராசி வலய இயந்திரங்கள்), பழந்தமிழ் இலக்கியங்களில் இழையோடியுள்ள வானியல்-கணிதம் தொடர்பான சிந்தனைகள், அண்டவியல் ஆய்வுகளின் முன்னோடிகளான திருமூலரும் மணிவாசகரும் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234249).

ஏனைய பதிவுகள்

14781 பணிக்கர் பேத்தி.

ஸர்மிளா ஸெய்யித். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). 104 பக்கம், விலை: இந்திய ரூபா 125.00, அளவு: 21.5×14 சமீ.,