9424 கண்டலும் சூழலும்.

ஏ.சி.எம்.நியாஸ் (இயற்பெயர்: அப்துல் காதர் முஹம்மது நியாஸ்). இலங்கை: இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம், IOCN, இலங்கைக் கிளை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு: கருணாரத்ன அன் சன்ஸ்).

ix, 130 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-0729-00-5.

இந்நூல் இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IOCN) இலங்கை அலுவலகத்தினூடான எதிர்காலத்துக்கான கண்டல் (MFF) நிகழ்ச்சித் திட்டத்தின் நிதி அனுசரணையுடன் கடல் மற்றும் கரையோர வன பாதுகாப்பு ஸ்தாபனம் (MCRCF) செயற்படுத்தும் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்ட தமிழ் பேசும் சமூகத்திற்குத் தேவையான அறிவையும் தகவல்களையும் பெற்றுக்கொடுப்பதன் மூலம் கண்டலைப் பாதுகாத்தல் என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினால் வெளியிடப்பட்டது. கண்டல் என்றால் என்ன, கண்டல்  சார்ந்த தாவரங்கள் என்றால் என்ன, கண்டல்  தாவரங்களும் வற்றுப்பெருக்கு நில வலயங்களும், கண்டற் சூழல் தொகுதி, கண்டல்  காடுகளின் பரம்பல், கண்டல்  தாவர இனங்கள், கண்டல்  தாவரங்களின் இசைவாக்கங்கள், கண்டல்  தாவரங்களை இனங்காணல், இலங்கையில் பிரதானமாகக் காணப்படும் கண்டல்சார்ந்த தாவர இனங்கள், கண்டற் சூழலின் உயிரினப் பல்வகைமை, கண்டல் தாவரங்களின் முக்கியத்துவங்கள்,  இலங்கையில் கண்டல் காடுகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற நூலாசிரியர், 1980 முதல் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றுகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 226057).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

17000 நோபல்பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் – 14 (2003-2006).

நா.சு.சிதம்பரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  80 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 280., அளவு: