9458 செகராசசேகர வைத்தியத் திறவுகோல்.

நாகரத்தினம் கணேசலிங்கநாதன். மகரகம: ஆயுர்வேதத் திணைக்களம், நாவின்ன, 1வது பதிப்பு, 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டர்ஸ்).

535 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 14.5×22 சமீ.

யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனப் பெயராகவும், வழிவழிவந்த பெயராகவும் கொள்ளப்படும் செகராசசேகரம் தனித்துவ மன்னர் ஆட்சியாக மாத்திரம் அல்லாது தனித்துவ மருத்துவ முறைகளையும் கொண்டியங்கியிருந்துள்ளது. அரசனே வைத்தியனாகவும் இருந்துள்ளான் என்பர் வரலாற்றாய்வாளர். மன்னன் செகராசசேகரன் காலத்தில் பல்வேறு வைத்திய நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் முக்கியமானதாகக் கருதப்படும் செகராசசேகரம் 1932இல் ஏட்டுருவிலிருந்து அச்சுவேலி த.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் முயற்சியால் அச்சுவாகனமேறியது. அந்நூலுக்கான விளக்கமாக இத்திறவுகோல் அமைகின்றது. நூலாசிரியர் வைத்திய கலாநிதி நாகரத்தினம் கணேசலிங்கநாதன் வட்டுக்கோட்டை, சிவன்கோவிலடிடைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 220086).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Паріматч: сучасна букмекерська контора в Україні

Содержимое Вход Parimatch Початок діяльності Етапи розвитку БК Париматч Класичні ігри Сучасні ігри Скачать мобильное приложение Париматч на телефон Ліцензування та регулювання Захист користувачів Приложение

15632 ஐங்குறுநூற்று அரங்கம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: ஜீவா பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2008. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ). 400+44 பக்கம்,