9463 குலசேகரம்: பெரிய பரிகாரியார் பரம்பரையினரின் அனுபவ விடவைத்தியம்.

தண்டிகை குலசேகரம்பிள்ளை (இயற்பெயர்: கலாநிதி கே.பாலசுப்பிரமணியம்). யாழ்ப்பாணம்: பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்திய சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 1985. (குரும்பசிட்டி: அம்பிகா அச்சகம்).

(5), 38 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 20.5×14 சமீ.

பெரிய பரிகாரியார் ஞாபகார்த்த சித்த வைத்தியர் சங்கத்தின் செயலாளரான நூலாசிரியர்  இலங்கா தமிழ் வைத்திய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் சேவையாற்றியவர். இந்நூலில் விஷஜந்துக்களால் ஏற்படும் மரணங்களைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் கூறப்பட்டுள்ளன. விஷப்பாம்புகளைக் கண்டறியக்கூடியதாகவும்,விஷங்களை இனங்காணக்கூடியதாகவும், முதலுதவி, விஷம் பரவுவதைத் தடுக்க ஆரம்ப சிகிச்சை, பிரதான சிகிச்சை எல்லாவற்றையும் சாதாரண வாசகரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. விடமென்றால் என்ன? பாம்புகளின் விடப்பல், பாம்புகளின் விடம், பாம்புக்கடிக்கு முதலுதவி, விடமில்லாதவை, விடம் அதிகரிப்பது எதனால்? பாம்புகளின் பிரிவும் விடமுள்ளவையும், பாம்புகளின் குடும்பங்கள் என இன்னோரன்ன தலைப்புகளில் இந்நூல் விரிந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 83949).    

ஏனைய பதிவுகள்

12110 – திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர்.

எஸ். திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: எஸ்.திருச்செல்வம், தலங்காவற் பிள்ளையார் கோவில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: முரசொலி அச்சகம்). (52) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ. மேற்படி