9479 உணவும் போசணையும்.

வசந்தி அரசரத்தினம், சறோஜினி பேரானந்தன். யாழ்ப்பாணம்: சறோஜினி பேரானந்தன், 17(53) நாயன்மார் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம், 28ஏ மடம் வீதி).

xii, 277 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 750., அளவு: 29.5×22.5 சமீ.

போசணைச் சத்துக்கள், காபோவைதரேற்றுக்கள், புரதங்கள், இலிப்பிட்டுக்கள், உயிர்ச்சத்துக்கள், கனிப்பொருள்கள், சமிபாடும் அகத்துறிஞ்சலும், அனுசேபம், போசாக்கின் தத்துவம், விலங்குகளிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் பெறப்படும் உணவுகள், வேறுபட்ட வயதினருக்கும் உடல்நிலைகளுக்கும் தேவையான போசணைகள், நோயியல் போசாக்கு, சமூகப் போசணை, உணவைப் பாதுகாத்தல், உணவுப் பொருள்களுக்கான ஆய்வுகூடப் பரிசோதனைகள், உணவுவகைகளும் பாகஞ்செய்யும் முறைகளும், உணவுத் தயாரிப்பின் விஞ்ஞானத் தத்துவங்கள், க.பொ.த.உயர்தர பாடத்திட்டத்தில் உணவும் போசணையும், ஆகிய பிரதானமான 18 பிரிவுகளில் விடயங்கள் தரப்பட்டுள்ளதுடன் க.பொ.த உயர்தர வினா-விடையும், இறுதி இயலில் வழங்கப்பட்டுள்ளன. பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உயிர் இரசாயனவியல்துறையின் பேராசிரியராவார். திருமதி சறோஜினி பேரானந்தன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் மனைப்பொருளியல் விரிவுரையாளராவார். வடமாகாணத் தமிழ் இலக்கிய விழா 2006ம் ஆண்டுக்கான இலக்கியப்பரிசை வென்ற நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 158831).

ஏனைய பதிவுகள்

Enjoy Blackjack

Articles Enjoy Black-jack On your own Cellular Having Partycasino Are More Desk Online game Simple tips to Claim Free Revolves Incentives At the Online casinos