9628 பனைமரக் காடு.

ஈழபாரதி (இயற்பெயர்: எட்வேட் நிக்சன்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ்).

62 பக்கம், விலை: இந்திய ரூபா 70.,அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81322-35-2.

இலங்கையில் நெடுந்தீவைச்சேர்ந்தவர் ஈழபாரதி. தற்போது தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். புதுக்கோட்டை தனியார் தொழிற்கல்வி நிலையமொன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் எழுதி, தமிழகத்தின் சிற்றிதழ்களான இனிய நந்தவனம், ஏழைதாசன், மின்மினி ஆகியவற்றில் பிரசுரமான  ஹைக்கூ பாணியில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூலாகும். பக்கங்கள் தோறும் பொருத்தமான படங்களுடன் கவர்ச்சிகரமாக வடிவமைப்புக் கண்டுள்ளது. 20.8.2014 அன்று ஆசிரியரின் திருமண விழாவன்று இந்நூலும் வெளியிடப்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 249073). 

ஏனைய பதிவுகள்