9758 செய்யுட் கோவை: க.பொ.த.உயர்தரம் தமிழ்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஆவணி 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

v, 198 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ.

முன்னாள் கல்விப்பணிப்பாளர், இலக்கிய வித்தகர் கவிஞர் த.தரைசிங்கம் அவர்களின் இந்நூல் 2009ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. நூலறிமுகம், பதவுரை, பொழிப்புரை, குறிப்பு, அரும்பதப் பொருள் என்பன அடங்கியது. பொருத்தமான மாதிரி வினாக்களையும் உள்ளடக்கியது. குறுந்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம், சுந்தரர் தேவாரம், பெரியாழ்வார் திருமொழி, தேம்பாவணி, பாரதியார் கவிதைகள், உமர் கய்யாம் பாடல்கள், கம்பதாசன் கவிதை, பிச்சமூர்த்தி கவிதை, மஹாகவி கவிதை, நீலாவணன் கவிதை, புரட்சிக் கமால் கவிதை, நற்றிணை, மணிமேகலை, சீறாப் புராணம், தனிப்பாடல் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை கவிதை, முருகையன் கவிதை, சுபத்திரன் கவிதை, குறிஞ்சித் தென்னவன் கவிதை,  மாதிரி வினாக்கள் ஆகிய 23 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 47304).          

ஏனைய பதிவுகள்

11184 அல்வாய் அரசடி விநாயகர் பக்திப் பாடல்கள்.

சுந்தரம்பிள்ளை திருப்பரங்குன்றன். லண்டன்: ஸ்லீ வெளியீடு, 607, Whitton Avenue West, Greenford, Middlesex, UB6 0DZ, 1வது பதிப்பு, ஆனி 2015. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,