9760 தமிழ் இலக்கிய வினா விடை: க.பொ.த. சாதாரண பரீட்சைக்குரியது 1965-1967.

பொன்.கந்தசாமி. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 234, காங்கேசன்துறை வீதி, திருத்திய 2வது பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

120 பக்கம், விலை: ரூபா 1.75, அளவு: 21×14 சமீ.

மாதகல், பொன். கந்தசாமி அவர்களால் எழுதப்பெற்ற இந்நூல் கல்விப்பொதுத் தராதரப் பத்திர (சாதாரண)ப் பரீட்சைக்குரிய விபுலாநந்த ஆராய்வு, கம்பராமாயணம்-அயோத்தியா காண்டம் (மந்தரை சூழ்ச்சிப்படலம்-கைகேயி சூழ்வினைப்படலம்), பாரதியார் பாடல்கள், பாரதச் சுருக்கம் என்னும் நூல்களுக்குரிய மாதிரி வினா விடைகள் பரீட்சைச் சித்திக்குரிய முறையிலே எழுதப்பட்டுள்ளன. விபுலானந்த ஆராய்வுச் செந்தமிழ்க் கட்டுரைகள் இலகுவான வசனநடையில் மாணவர்கள் கிரகித்துக்கொள்ளும் முறையிலே அமைந்துள்ளன. இன்னும் இடஞ்சுட்டி விளக்குதல், பொழிப்புரைகள், இலகுவான வசன நடைகள், நயங்கள், அணியிலக்கண எடுத்துக்காட்டுகள் என்பன தெளிவாகவும், நடைநலம் பொருந்தவும், எளிதிலே மனதிற் பதியவும் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  87011). 

ஏனைய பதிவுகள்

17343 பச்சையா? நீலமா? (4.1).

அனுஷா ஸ்ரீதரன் (மூலம்), குமாரவேலு கணேசன் (பதிப்பாசிரியர்). அவுஸ்திரேலியா: ஸ்டெம் கல்வி அறக்கொடை, STEM-KALVI Charity, 1வது பதிப்பு, 2024. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5சமீ.,