த.துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
xii, 300 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1162-48-1.
ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரான நூலாசிரியர் சிறுவர் நூல்களையும், பாடநூல்களையும் ஏராளமாக வெளியிட்டவர். இந்நூலில் 17ஆம் நூற்றாண்டு முதல் ஈழத்தில் வாழ்ந்து மறைந்த அறுபது தமிழ் அறிஞர்களின் அரும்பணிகளை இளம் தலைமுறையினருக்கு ஏற்றவகையில் சுருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார். இப்பெரியார்கள் பற்றி ஏராளமான தனி நூல்களும் கட்டுரைகளும் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்புகளும் கட்டுரைகளும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகச் சூழலில் வெளிவந்துள்ளபோதிலும், ஒரே நூலில் மாணவர்கள் இவர்களைப்பற்றி அறிந்துகொள்ள இந்நூல் உதவுகின்றது.