9863 மருந்தற்ற வாழ்வு.

தொகுப்பாளர்கள். தெல்லிப்பளை: பசுபதி இராசதுரை குடும்பத்தினர், தெல்லிப்பளை கிழக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 6: விகடன் பதிப்பகம், 541/2 காலி வீதி).

(6), 56பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

அமரத்துவமடைந்த பசுபதி இராசதுரை (24.9.1928-02.12.2013)அவர்களின் நினைவாக வெளியிடப்பெற்றுள்ள இந்நினைவு மலர் முழுமையாக  நோயற்ற வாழ்வுக்கான இயற்கை வைத்தியம் பற்றிப் பேசுகின்றது. இறப்பதற்கு அழகான தருணங்கள் என்ற ஓசோவின் குறிப்புடன் தொடங்கும் இந்நூல், ஐயாவின் கதை என்ற தலைப்பில் அன்னாரின் மருமகனான காசிநாதர் ஞானதாஸ் எழுதிய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், இயற்கை உணவு, உபவாசம், இயற்கைச் சிகிச்சை, நோயும் சிகிச்சையும் ஆகிய விடயங்களைக்கொண்ட சிறு கட்டுரைகளையும் விளக்கப்படங்களுடன் அடக்கியுள்ளது.

ஏனைய பதிவுகள்

16453 அக்கரைப் பச்சை.

ஏ.சீ.அப்துல் றகுமான். ஏறாவூர்: ஹனிமூன் பதிப்பகம், 1வது பதிப்பு, 2021. (ஏறாவூர்: ஹிரா அச்சகம்). viii, 134 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-624-97405-0-1. 1965 முதல்