9865 நினைவுப் பெருவெளி: ஒரு பெண் பத்திரிகையாளரின் மனப்பதிவுகள்.

அன்னலட்சுமி இராஜதுரை. கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

288 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0811-01-4.

வீரகேசரி நிறுவனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய பத்திரிகையாளரான அன்னலட்சுமி இராஜதுரை அவர்களின் மலரும் நினைவுகள் இங்கு  பக்கம் தோறும் சுவையாக விரிகின்றன. யாழ் புகையிரத நிலையத்தில், வளமாய் வாய்த்த ஊர், ஆரம்பக் கல்விக்கு ஊர்ந்து சென்ற காலம், செங்குந்தா இந்துக் கல்லூரியில், வாசிப்பு மோகம், எழுத எழுந்த ஊக்கம், கேசரியில் கால் பதித்தேன், வீரகேசரி ஆசிரியர் கே.வி.எஸ். வாஸ், மாணவர் கேசரி, ஆசிரியர் பகுதியில் நிர்வாக அதிபரின் தனிக்கவனம், கேசரியின் நூல் வெளியீட்டு முயற்சி, எம்.ஜி.ஆரின் இலங்கை வருகை, நிர்வாகம் கைமாறியது, 1983ஆம் ஆண்டின் ஆடிக்கலவர அநர்த்தம், எழுத்தாற்றலும் வாசிப்பும், ஆசிரியபீட சகோதரர்கள், திரைப்படங்களின் செல்வாக்கு, பத்திரிகையில் ஒவ்வொரு துறைக்கும் தனிப்பக்கங்கள், இரவுநேரப் பத்திரிகைப் பணியின் பெறுமானம், பெண்களுக்கு வாக்குரிமை, கணனி தொழில்நுட்பத்திற்குள் பிரவேசம், பத்திரிகை விளம்பரங்கள், ஆடிக் கலவரம் உணர்த்திய உண்மை, பெண்கள் கல்வியும் தொழில்களும், பீஜிங் உலகப் பெண்களின் மாநாடு, தேசியப் பத்திரிகைகளின் பங்கும் பணியும், 75ஆவது ஆண்டு நிறைவு விழா, நேர்காணல்கள், மறக்கமுடியாத சந்திப்புக்கள் சம்பவங்கள் சில, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-2010, கலைக்கேசரி, வானொலி அனுபவம், சரியான நேரத்தில் சரியான பதில் ஆகிய  தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 227075).     

ஏனைய பதிவுகள்

Cassino aquele Aceitam PicPay Taxas

Content Encontre barulho melhot Cassino que aceita Paypal Cassino online com criptomoedas: Stake Benefícios criancice aprestar cassino usando cripto conhecimento invés criancice algum fiat Qual