9864 என் எழுத்தாயுதம்: ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு.

என்.வித்தியாதரன். யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், 20 கல்லூரி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், 20 கல்லூரி வீதி).

xx, 556 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 20.5×14.5 சமீ.

தனது ஊடகத்துறை வரலாற்றில் சுமார் இரண்டரை தசாப்தங்களை உதயன், சுடர் ஒளி பத்திரிகைகளை நெறிப்படுத்தும் ஆசிரிய பீடத்தின் முக்கிய பொறுப்புக்களில் செலவிட்டவர் என்.வித்தியாதரன். அவரது ஊடகத்துறை அனுபவங்களாக மாத்திரம் இந்நூல் அமையவில்லை. இது ஒரு கருத்துருவாக்கியின் சுயசரிதை எனலாம். தமிழ்த் தேசிய இனத்தின் சொந்த வரலாற்றில் ஒரு காலகட்டத்தைத் தனது வாழ்வினூடாக வித்தியாதரன் பதிவுசெய்திருக்கிறார். தான் ஊடகப் பணியாற்றிய கடைசி 25 ஆண்டுகள் தவறான புரிதல்களினால் ஏற்படுகின்ற அரசியல் இடைவெளிகளை மனிதர்கள் துப்பாக்கிக் குண்டுகளால் நிரப்பிய காலம். வித்தியாதரனின் வெற்றிகள் என்பவை-வெல்லமுடியாத மனங்களையும் தேடிச்சென்று தட்டிய அவரது துணிவினாலும், துப்பாக்கிகளையும் மீறி மனிதர்களது மனங்களைத் திறக்கும் அவரது பண்பினாலுமே சாத்தியமாகின்றன என்கிறார் இந்நூலுக்கு மதிப்புரை வழங்கிய திருச்சிற்றம்பலம் பரந்தாமன். ஊடகப்பணியாற்ற விரும்பும் அனைவரும் படிக்கவேண்டியதொரு நூல் இது.

ஏனைய பதிவுகள்

Spielbank Bonus exklusive Einzahlung

Content Erreichbar Casino Freispiele ohne Einzahlung im Jahr 2021 Freispiele Bestimmung ringsherum um Angeschlossen Spielsaal Bonus exklusive Einzahlung Wie gleichfalls findet man angewandten Erreichbar Kasino