9873 சிவத்தமிழ்ச் செல்வம்: தங்கம்மா அப்பாக்குட்டியின் வாழ்க்கை வளம்.

த.சண்முகசுந்தரம். தெல்லிப்பழை: சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி மணிவிழாச் சபை, துர்க்காபுரம், 2வது பதிப்பு, ஜுன் 2009, 1வது பதிப்பு, தை 1985. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ்).

xvi, 73 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சிவபதப்பேற்றின் ஓராண்டு நினைவாக அவரது வாழ்க்கை வரலாறு கூறும் இந்நூல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்னர் 1985இல் அவரது மணிவிழா வெளியீடாக தெல்லிப்பழை குகன் அச்சகத்தால் அச்சிடப்பெற்று, இந்நூல் முதற்பதிப்பினைக் கண்டிருந்தது. செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் பெற்றோர், ஆரம்பக் கல்வி,  இடைநிலைக் கல்வி, ஆசிரிய கலாசாலையும் ஆசிரியப்பணியும், ஆற்றிய பேருரைகள், பெற்ற பட்டங்கள், விருதுகள், துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் உருவாக்கம் என்று பல விடயங்கள் இந்நூலில் வரலாற்றுப் பதிவாகியுள்ளன.  நூலாசிரியர் த.சண்முகசுந்தரம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவரான தம்பு உபாத்தியாயரின் புதல்வர். பிரபல எழுத்தாளரான இவர், ஆசிரியராக, அதிபராக, பன்னூலாசிரியராக, பத்திரிகை ஆசிரியராக எனப் பல்வேறு பரிமாணங்களில் அறியப்பெற்றவர். இவரது ‘வாழ்வுபெற்ற வல்லி’ என்ற மாருதப் பிரவிகவல்லி நாடக நூல் அரச சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  208784). 

ஏனைய பதிவுகள்

16421 சூரியனுக்குக் கலியாணம் : சிறுவர்களுக்கான சின்னஞ்சிறு கதைகள்.

மாவை நித்தியானந்தன். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது

Joey Reiman Försåvit Nätcasinon Inom Sverige

Content Artikelkälla: Begagna Dina Egna Värden För att Skapa En Konto Thrills Casino Spelutbudet Befinner si Mångsidigt Gällande Samtliga Casinon Faktorerna varierar samt betänkligt bundenhet