9893 அடிச்சுவடுகள்.

இளவாலை செ.இராசநாயகம். கனடா: மரியநாயகி (இராஜேஸ்வரி) இராசநாயகம், ரொரன்ரோ, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கனடா: பென்குயின் கிராப்பிக்ஸ்).

xv, 248 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

எங்கள் அருந்தவச் செல்வமகன், இளவாலைத் தாய் மண்ணுக்கு வாழ்த்து, அன்னையின் அணைப்பில் அகரம் எழுத, எந்தையுடன் கென்றியரசர் கல்லூரியில், அன்னையின் ஆசியுடன் ஆசிரியனாக, அழகு நிறை நாவலப்பிட்டி, உலக முடிவைக்கண்டு ஓடும் தொடருந்து, தூய உறவும் நேய நட்பும், தந்தை செல்வாவின் முன்,  எதிர்ப்பின் குரலை எதிரொலித்தமை, கதிரேசனோடு கலந்துறை வாழ்வில், அல்லி அரசாட்சியுடன், சந்தியில் ஒரு திடீர் இடமாற்றம், சந்தியில் மீண்டும் ஒரு திருப்பம், நாடகத்தில் நாற்றுமேடை, வளனார் பெயரில், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துடன், கூப்பன் மறைவின் கொடுந்துயரம்.. என இன்னோரன்ன தலைப்புகளில் ஆசிரியர் தன் வாழ்வுப்பயணத்தை இந்நூலில் சுவையாக இலக்கிய நயத்துடன் பதிவுசெய்திருக்கிறார். ஆசிரியர் இளவாலை ஹென்றி அரசர் கல்லூரியில் கற்று அங்கு ஆசிரியப்பணியாற்றியவர். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இவர் அங்கும் சில்வர் ஸ்பிரிங்ஸ் பார்க் வாசிப்பு வட்டம், ரொரன்ரோ தூய ஆரோக்கிய அன்னைப் பங்குப் பணிச்சபை ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றுகிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 227631).

ஏனைய பதிவுகள்

Free Slots

Content Free Slots Canada No Download No Registration – Website How To Start Playing Free Slots Live Casino Games And Shows Also, you may improve