9908 அஸீஸூம் தமிழும்.

ஏ.எம்.நஹியா. நிந்தவூர் 5: இக்ரஃ வெளியீட்டகம், 233 கிட்டங்கி வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1991. (கொழும்பு 12: குமரன் அச்சகம்).

x, 213 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 21×14 சமீ.

ஈழத்து முஸ்லிம் தமிழ் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் (1911-1973) அவர்கள் தன் வாழ்நாளில் தமிழுக்கு ஆற்றிய தொண்டு பற்றிய பதிவாக எழுந்துள்ள  இந்நூல், சூழல் ஆக்கிய தமிழறிஞன், மொழிக் கொள்கை, முஸ்லிம்களின் தாய்மொழி, முஸ்லிம்களின் கல்வி மொழி, அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், தமிழ் மொழி ஞானம், இராமாயண மோகம், சிங்களம் மட்டும் சட்டம், தமிழர்-முஸ்லிம் ஐக்கியம், ஸாஹிறாவில் தமிழ்ப்பணி, மகாநாடுகளில் அஸீஸ், ஆய்வியல் வழிகாட்டி, அறிஞர் அறிமுகம், முஸ்லிம் பத்திரிகை ஆய்வும் தேடுகையும், அறபு-தமிழ் அகராதி, இஸ்லாமிய இலக்கியங்களுக்கு பாடநூல் அந்தஸ்து, மொழிபெயர்ப்பும் வெளியீடும், கட்டுரையாசிரியர், பன்னூலாசிரியர், பிரயாண இலக்கியகர்த்தா, தமிழ் அபிமானி ஆகிய 21 தலைப்புகளின்கீழ் அவரது பணிகளை விபரிக்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 103022).

ஏனைய பதிவுகள்

Ultimat Utländska Casino 2024

Content Kasino Best 100 – Nya Casino Sidor Spelbolagsjämförelse Tröja 5 Erbjudanden Försåvitt Insättningsbonusar Hurdan Tar Själv Ut Mina Vinster Tillsamman Någo Välkomstbonus? Charles Fey

11275 அது எங்கட காலம்: நனவிடைதோய்தல் தொகுப்பு.

கானா பிரபா. அவுஸ்திரேலியா: மடத்துவாசல் பிள்ளையாரடி வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). xviii, 128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ. கானா

17545 கேயொஸ் தியறி.

வேல். லவன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜுலை 2024. (பருத்தித்துறை: