9960 தேசியப் பிரச்சினை: அனைத்தும் அரச அதிகாரம் பற்றியதே.

ஜயம்பதி விக்கிரமரட்ண. கொழும்பு: இலங்கைத் தமிழரசுக் கட்சி, கொழும்பு மாவட்டக் கிளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (யாழ்ப்பாணம்: சிவராம் பதிப்பகம், கல்லூரி வீதி).

27 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவுநர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 37வது வருட நினைவுநாளை ஒட்டிய நிகழ்வின் போது 26.4.2014 அன்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ணவினால் நிகழ்த்தப்பட்ட உரை. “பல்லின, பல சமய யூகோஸ்லாவியாவை ஆதிக்கம் செலுத்த முனைந்து சேர்பியர்கள் தமது நாட்டில் சேர்பியர் அற்ற பாகங்களை இழந்து (அவர்களது புனித தலங்கள் காணப்பட்ட கொசோவோ உட்பட) அவர்களுடைய வரலாற்றுப் பெரும்பான்மையுடைய பாகத்துக்குள் முடக்கப்பட்டார்கள். தெற்காசியாவின் சேர்பியர்கள் சிங்களவரே” என்ற தயான் ஜெயதிலகவின் கூற்றை எடுத்துக்காட்டி, முன்மொழிவுகளை தயாரிப்பதிலும் விட அரசமைப்பை உருவாக்குவது மிகச் சிக்கலானது. 1994 முதல் 2000 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளையொத்த முயற்சிகளிலும் பார்க்க, புதிய வடிவத்திலான ஓர் அரசமைப்பை உருவாக்க முயல்வது இப்போதைய நிலையில் சாலச்சிறந்தது என்பதை ஆசிரியர் வலியுறுத்துகின்றார்.

ஏனைய பதிவுகள்

Enjoy Baccarat for real Currency or Online

Blogs Live Specialist Roulette Game Benefits of Totally free Baccarat Game Baccarat Incentives and you may Campaigns Bovada Gambling establishment Alternatively, playing to the pro

12812 – மறுபிறப்பு (சிறுகதைத் தொகுப்பு).

வை.கஜேந்திரன். மன்னார்: தமிழமுது நண்பர்கள் வட்டம், 10/38, முதலாம் ஒழுங்கை, எமில் நகர், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xvi, 112 பக்கம், விலை: